லண்டன் திரை அரங்கில் முதன் முறையாக…. முழு நீள கோலிவுட் திரைப்படம் 18.5.2009

மேஸ்ரோ இளையராஜா இசையில், 18.05.2009 என்ற முழு நீள கோலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் தமிழ் நாட்டில், 18.05.2018 வெள்ளி அன்று சுமார் 411 திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ள நிலையில். 19.05.2018 சனிக்கிழமை, மற்றும் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு தினங்களுக்கு லண்டனில் காண்பிக்கப்பட உள்ளது. உணர்வாளர் இயக்குனர் கனேஷ் அவர்கள் இயக்கியுள்ள இத்திரைப்படம், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஆனால் வெளியிடப்படாத சில ஆதாரபூர்வ தகவலை மையமாக வைத்து, இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் கு.கனேஷ் அவர்கள். முதன் முறையாக ஈழத் தமிழர்களின் போர் வரலாற்றை சொல்லும் வகையில். மிகவும் உணர்ச்சி மிக்க திரைப்படமாக இது அமைந்துள்ளது. உணர்வாளர் மற்றும் நடிகருமான திரு.சத்திராஜை கண் கலங்கவைத்த இந்த திரைப்படத்தை வெற்றியடைய வைக்க. உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதனை பார்க்கவேண்டும்.

தமது ஆதரவை நல்க வேண்டும் என்று, பல உணவர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

-athirvu.com