நெகிரி பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து இசா சாமாட் நீக்கப்பட்டார்

 

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் இசா சாமாட் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான மாநில பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார்.

பெல்டா சம்பந்தப்பட்ட பல ஊழல்களில் சிக்கியிருந்த இசாவை தற்போதைய நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசான் மாநில வேட்பாளராக நியமித்திருந்தார். இருந்தும், அவர் தேர்வு செய்யப்படவில்லை.

நெகிரி ஜெலுபு தொகுதியை மஇகாவுக்காவுக்கு விட்டுக்கொடுத்து மஇகாவின் தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதியில் இசா போட்டியிடுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே, இசா இடம் பெறாத நெகிரி பிஎன் வேட்பாளர்கள் பட்டியலை நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசான் இன்று வெளியிட்டார். அதில் மஇகாவின் மோகன் வேலாயுதம் மறுபடியும் போர்ட் டிக்சன் (முன்பு தெலுக் கெமாங்) தொகுதியில் போட்டியிடுகிறார்.