பிகேஆரில் கட்சித் தாவலுக்கு ரிம10மில்லியன் அபராதம்

தேர்ந்தெடுக்கப்பட்ட   பிகேஆர்   பிரதிநிதிகள்  வோறொரு  கட்சிக்குத்   தாவினால்  ரிம10மில்லியன்  அபராதம்  விதிக்கப்படும்.

கட்சி  மூத்த   தலைவர்   ஜொகாரி  அப்துலைத்   தொடர்புகொண்டு   விசாரித்தபோது   2008  தேர்தலில்  சில  பிகேஆர்   பிரதிநிதிகள்     கட்சி   மாறியதை   அடுத்து  2013  தேர்தலிலிருந்து   கட்சி  அதை   நடைமுறைப்படுத்தி  வருவதாகக்  கூறினார்.

“ஆனால்,  அப்போது   அதற்கான   சட்டப்படியான   ஆவணங்கள்   தயாராக  இல்லை”,  என்றார்.

எனவே  அப்போது  வாய்மொழியாக   மட்டுமே   உறுதிமொழி   வழங்கப்பட்டது.

ஆனால்,  இப்போது  நாடாளுமன்றத்துக்கும்   சட்டமன்றங்களுக்கும்  போட்டியிடும்   வேட்பாளர்கள்  அனைவரும்    அதற்கான   ஆவணங்களில்   நேற்று   கையெழுத்திட்டதாக   அவர்   தெரிவித்தார்.

நேற்று   பிகேஆர்   அதன்  வேட்பாளர்களுக்கு   நியமனக்  கடிதங்களைக்  கொடுத்தது.

“இப்போது   பிரதிநிதிகள்  ஒன்றுக்கு  இரண்டு   தடவை   யோசிப்பார்கள்(கட்சித் தாவ). ரிம10 மில்லியன்   வேண்டுமே”,  என்றார்.