இதுதான் பிரச்சனை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில்?

இன்று இந்தப் பூமிப்பந்தையே அழித்துவிடும்படியான உலகயுத்தத்தை நோக்கி நகர்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இஸ்ரேல் ஈரான் யுத்தத்தின் உண்மையான பின்னணி பற்றி ஒரு சுருக்கமான பார்வை:

இஸ்ரேலுக்கு தொடர்ச்சியாகக் குடைச்சலைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஹிஸ்புல்லா அமைப்பு 1980ம் ஆண்டு ஈரான் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. லெபனானில் செயற்பட்டுக்கொண்டிருந்த சியா முஸ்லிம் போராட்டப் பிரிவுகள் பலவற்றை ஒன்றிணைத்து ‘ஹிஸ்புல்லா’ அமைப்பை ஈரான் உருவாக்கியிருந்துடன், அந்த அமைப்பிற்கான அனைத்து ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை ஈரானே செய்தும் வருகின்றது.

அணுவாயுத உற்பத்தியை ஈரான் மேற்கொண்டுவருவதாக நம்பப்படும் இந்த நேரத்தில், அப்படியான அணுவாயுதங்களை ஈரான் நேரடியாக ஹிஸ்புல்லாக்களுக்கு வழங்கி இஸ்ரேல் மீது அணுவாயுதத் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு இருக்கின்றது.

2011ம் ஆண்டு ஆரம்பமான சிரியா சிவில் யுத்தத்தில் சிரிய அதிபருக்கு ஆதரவாக தனது படைகளை அனுப்பிய ஈரான், படிப்படியாக தனது படைகளை சிரியாவின் தென் புறமாக நகர்த்தி இஸ்ரேல் எல்லையில் ‘கோலான் ஹைஸ்’ (Golan Heighs) என்ற பிரதேசத்தை அன்மித்த பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கின்றது.

ஈரானில் இருந்து, ஈராக் மற்றும் சிரியா வழியாக இஸ்ரேல் எல்லை வரையிலான ஒரு தரைவழி வினியோகப் பாதையை தற்றொழுது உருவாக்கி வைத்துள்ள ஈரான், ஆயிரக்கணக்கான படையினர், கனரக ஆயுதங்கள் போன்றனவற்றை சிரியாவிற்குள் நகர்த்தி, நிரந்தனமான பல தளங்களை சிரிய இஸ்ரேல் எல்லையில் அமைத்தும் வைத்துள்ளன.

சிரிய இஸ்ரேல் எல்லையான (Golan Heighs) பிரதேசத்தை அன்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ள ஈரான் படைகள் எந்த நேரத்திலும் இஸ்ரேல் மீதான ஒரு முழு அளவிலான தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்று இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவான மொஸாட்டின் தலைவர் Yossi Cohen சில நாட்களின் முன்பு அச்சம் வெளியிட்டிருந்தார்.

அதுவும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உண்மையானால், அந்தத் தாக்குதல் ஒரு அணு ஆயுதத் தாக்குதலாகக்கூட அமைந்துவிடலாம் என்று அச்சப்பட்டுக்கொடிருந்தது இஸ்ரேல்.

ஈரானின் இந்த இராணுவ நகர்வினைத் தடுப்பற்கு இஸ்ரேல் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. 2013ம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லாக்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வினியோகித்துக்கொண்டிருந்ததாகக் கூறி, இஸ்ரேலின் விமானப் படை ஹிஸ்புல்லாக்கள் மீதும் ஈரானிய படைகள் மீதும் பல தாக்குதலைகளை மேற்கொண்டிருந்தன.

இந்த நிலையில்தான் கடந்த 10.05.2018 அன்று அதிகாலை இஸ்ரேலின் Golan Heighs மீது ஈரான் நேரடியாகத் தாக்குதலை மேற்கொண்டது, இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டது- போன்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.

Golan Heighs என்ற பிரதேசம் சிரியாவிற்குச் சொந்தமான பிரதேசம். 1967ம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் யுத்தத்தில் சிரியாவிடம் இருந்து Golan Heighs என்ற அந்தப் பிரதேசத்த இஸ்ரேல் கைப்பற்றியதில் இருந்து, இந்தப் பிரதேசத்தை விடுவித்தேயாகவேண்டும் என்று சிரியா கங்கனம்கட்டி நிற்கின்றது.

இன்று சிரியாவில் சிரிய அரசதலைவருக்கு ஆதரவாக நின்று சண்டையிட்டுக்கொண்டிருக்கின்ற ஈரான் மற்றும் ரஷ;யப் படைகள் சிரியாவுடன் இணைந்துGolan Heighs பிரதேசத்தை மீட்கும் நோக்குடன் சண்டைகளை மேற்கொள்ளலாம் என்றும் இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அச்சம் வெளியிட்டு வருகின்றது

இடியப்பச் சிக்கலாக காட்சிதரும் இஸ்ரேல் ஈரான் விவகாரம் நாம் வாழும் இந்த பூமிப்பந்தை ஆபத்தான நிலையை நோக்கி இட்டுச்செல்லலாம் என்றே போரியல் நோக்கர்கள் அச்சம் வெளியிடுகின்றார்கள்.

-athirvu.in