டிஏபி தலைவர்கள் மகாதிருடன் சந்திப்பு

டிஏபி    தலைவர்கள்   சிலர்  இன்று  காலை   பிரதமர்   மகாதிர்  முகம்மட்டை   புத்ரா  ஜெயாவில்   பெர்டானா  தலைமைத்துவக்  கட்டிடத்தில்    சந்தித்தனர்.

பக்கத்தான்   ஹரப்பான்  பங்காளிக்   கட்சிகளில்   ஒன்றான   டிஏபியின்    தலைவர்களுக்கும்  பிரதமருக்குமிடையிலான    சந்திப்பு   ஒரு  மணி   நேரம்   நீடித்தது.

பெர்டானா   கட்டிடத்துக்குள்  டிஏபி   துணைத்   தலைவர்   கோபிந்த்   சிங்,    தலைமைச்   செயலாளர்   லிம்   குவான்   எங்,  அமைப்புச்   செயலாளர்  அந்தோனி  லொக்   ஆகியோர்   செல்லக்    காணப்பட்டனர்.

அவர்கள்     வெளியில்    வந்ததும்    அவர்களிடம்   சந்திப்பில்       பேசப்பட்டதை அறிய   செய்தியாளர்கள்   விரும்பினர்.   ஆனால்,   அவர்களின்     முயற்சி   பலனளிக்கவில்லை.   எதுவும்   பேசாமலேயே    டிஏபி   தலைவர்கள்   புறப்பட்டுச்    சென்று   விட்டனர்.