அன்வாருக்கு முழு மன்னிப்பு அளிக்க பேரரசர் ஒப்புக் கொண்டார்

 

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முழு மன்னிப்பு கோரும் முறையீடு மே 16 இல் 51 ஆவது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அம்முறையீடு பரிசீலிக்கப்பட்டது.

பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 42 க்கு ஏற்ப, மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைப்படி, பேரரசர் சுல்தான் முகம்மட் V, அன்வார் இப்ராகிமுக்கு முழு மன்னிப்பும் உடனடியான விடுதலையும் மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நடந்த தேதியிலிருந்து அளிக்க ஒப்புக்கொள்கிறார் என்று அரண்மனை அதிகாரி வான் அஹமட் தாலான் அப் அசிஸ் கூறினார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர், இஸ்தான நெகாரவுக்கு வந்து சேர்ந்தார்.

அவரை வரவேற்பதற்கு பிரதமர் மகாதிர் அங்கிருந்தார். இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.