வழக்குரைஞர் ஷாபிக்கு ரிம9மில்லியன் வழங்கப்பட்டதா? விசாரிக்க வேண்டும் என்கிறார் அமனா தலைவர்

முன்னாள்   பிரதமர்   நஜிப்    அப்துல்    ரசாக்    வழக்குரைஞர்    முகம்மட்  ஷாபி   அப்துல்லாவுக்கு   ரிம9மில்லியன்   வழங்கியதாகக்   கூறப்படுவதை    அதிகாரிகள்   விசாரிக்க   வேண்டும்   என  முகம்மட்  ஹனிபா  மைடின்   கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்விவகாரம்மீது    பக்கத்தான்  ஹரப்பான்   அரசாங்கம்   விவரமான   விசாரணையை   மேற்கொள்ளும்   என்று   அந்த  அமனா   தலைவர்   எதிர்பார்க்கிறார்.

“பல   தரப்புகள்,  மலேசிய   வழக்குரைஞர்   மன்றம்  உள்பட,   விசாரணை    செய்ய    வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டுள்ளனர்.

“நாடாளுமன்றத்திலும்    அவ்விவகாரம்      எழுப்பப்பட்டது   ஆனால்,   பிஎன்   பதிலளிக்கவில்லை.   பெர்சத்து   இளைஞர்கள்    போலீஸ்   புகார்   செய்தார்கள்.  என்னவானதென்று   தெரியவில்லை”,  என்றாரவர்.

அவ்விவகாரம்   குறித்து   வீணான   ஊகங்களில்   ஈடுபட   ஹரப்பான்   விரும்பவில்லை    என்று   கூறிய    சிப்பாங்   எம்பி,   குற்றச்சாட்டு   கடுமையானது   என்பதால்  மக்களுக்கு   உண்மை   தெரிவது   அவசியம்  என்றார்.