புலிகளுக்கு லண்டனில் தடை அதை சொல்லி படத்தை நிறுத்த சில விஷமிகள் திட்டம் தீட்டினர்

லண்டனில் வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் 18.05.2009 என்ற இன அழிப்பு கொலிவுட் திரைப்படம் காண்பிக்கப்ட உள்ளது. இதனை வெளியிட்டால் இலங்கை அரசுக்கு நெருக்குதல் ஏற்படும் என்ற காரணத்தை மனதில் வைத்து. அதனை நேரடியாகச் சொல்லாமல் பிற காரணங்களை காட்டி இந்த திரைப்படத்தை லண்டனில் ஓடவிடாது செய்ய சில கைக்கூலிகள் முயன்று வருகிறார்கள். இவர்கள் லண்டனில் உள்ள தமிழ் சொலிசிட்டர் ஒருவரை அணுகி. இந்த திரைப்படத்திற்கு லண்டனில் தடை உத்தரவு வாங்கவேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

படத்தை பார்க்காமல் எப்படி தடை உத்தரவு வாங்குவது ? என்று அவர் கேட்டபோது. விடுதலைப் புலிகளை பிரித்தானிய அரசு தடை செய்துள்ளது. எனவே இது புலிகள் சம்பந்தப் பட்ட படம் என்று கூறி தடைசெய்யலாமே என்று சம்பந்தப்பட்ட இந்த இலங்கை அரசின் கைக் கூலிகள் சொல்லியுள்ளார்கள். நீங்கள் தமிழர்கள்கள் தானா ? என்று கேட்ட அந்த சொலிசிட்டர், அவர்களை கண்டபடி திட்டி கலைத்துள்ளார். இன அழிப்பு சம்பந்தமான இந்த முழு நீள திரைப்படத்தை , எப்படி என்றாலும் வெளிவர விட்டு விடக் கூடாது என்று ஒரு கும்பல் இயங்கி வருகிறது.

முதலில் திரை அரங்கை மிரட்டினார்கள். பின்னர் குறுஞ்செய்தி அனுப்பினார்கள். தற்போது புலிகள் தீவிரவாதிகள் என்று வசனம் பேசி தடை உத்தரவு வாங்க முயல்கிறார்கள். உண்மையில் இவர்கள் யார் ? தம்மை தேசிய செயல்பாட்டாளர்களாக காட்டிக் கொண்டு. இலங்கை அரசுக்கு துணை போகும் இவர்கள் தொடர்பான புகைப்படங்கள், செய்திகள், இவர்கள் வைத்திருக்கும் சொத்துகள் , இவர்கள் பணம் சேர்த்த விதம்… எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்வு இணையத்தில் வெளியாக உள்ளது. களை எடுக்க வேண்டிய நேரம் ஆரம்பமாகியுள்ளது.

இனி இன அழிப்பு நடந்த விடையத்தை நாம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறும் நபர்கள் யார் ? இவர்கள் ஏன் இப்படி கூறி இலங்கை அரசைக் காப்பாற்றி வருகிறார்கள் ? இவை அனைத்தையும் மக்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். லண்டனில் தற்போது பலமாக ஸ்ரீலங்கா கைக் கூலிகள் ஊடுருவி, மே 18 நிகழ்வுகளை குழப்பவும். அது தொடர்பான படத்தை காண்பிக்க விடாது தடுக்கவுமே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

-athirvu.in