முன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில் 1எம்டிபி குழு நிறுவப்பட்டுள்ளது

 

1எம்டிபி ஊழல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மேன்மைமிக்கவர்கள் மன்றம் இன்று மாலை அறிவித்தது.

1எம்டிபி விவகாரத்தை ஆய்வதற்காக ஒரு தனிப்பட்ட முழு இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை மன்றம் அங்கீகரிப்பதாக ஒரு செய்தி அறிக்கையில் அம்மன்றம் கூறுகிறது.

அக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். அக்குழுவின் தலைவராக முன்னாள் சட்டத்துறை தலைவர் அபு தாலிப் ஓத்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்குழுவின் இதர உறுப்பினர்கள்: நிக் ஷாரிஷால் சுலைமான், சைட் நாகுஸ் ஷகாபுடின் சைட் அப்டுல் ஜாபார், பாரிஸ் ரபிடின், சிந்தியா கேபிரியல்.

அந்த 1எம்டிபி குழுவின் பணி என்னவென்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவர்கள் சாட்சிகளை அழைத்து விசாரித்து அதன் பின்னர் அவர்களின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளிடம் அவர்களின் பரிந்துரையைத் தாக்கல் செய்வார்களா என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.

மலேசியாகினி மேற்கொண்டு விபரங்களைப் பெற முயன்று வருகிறது.