கொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் – 284 ஆடம்பர கைபேக்குகள், 72 பை ரொக்கம், நகைகள்

 

நேற்றிரவு கோலாலம்பூர் பெவியியன் குடியிருப்பு அடுக்ககத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் சொந்தமான வீட்டில் போலீஸ் மேற்கொண்ட சோதனைகளில் பிரமிக்க வைக்கும் சொத்துகளையும் ரொக்கத்தையும் கண்டனர்.

போலீஸ் மேற்கொண்ட சோதனைகளின் போது 284 ஆடம்பர கைபேக்குகள் மற்றும் நகைகள், இதர விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் பல வகையான ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அவற்றை 5 போலீஸ் வண்டிகளில் ஏற்றி அங்கிருந்து இரவு மணி 2.15 க்கு எடுத்துச் சென்றனர்.

ஆறு வீடுகளில் ஒரு வீட்டில் மேற்கொண்ட சோதனையில் இப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீஸ் அதிகாரி அமர் சிங் இஸ்ஹார் சிங் கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருள்கள் பெரும் அளவிலானதால் அவற்றின் மதிப்பை நிர்ணையிக்க முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.