கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக 16 கருப்பு இன நடிகைகள் போராட்டம்

பிரான்சின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர். இதில், பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது 16 கருப்பு இன நடிகைகள் கேன்ஸ்  திரைப்பட விழாவில்  இனவெறிக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர். நடிகை அஸ்ஸா மைகா, தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து மைகா கூறியதாவது:- “இது ஒரு வரலாற்று தருணம். இது என்  கனவுகளுக்கு அப்பாற்பட்டது.

20 வருடங்களாக, நான் ஒருபோதும் இது போன்று பாதிக்கபட்டது இல்லை. நான் அப்படி உணர்ந்ததில்லை என  கூறினார்.

இந்த குழுவில் பீஸாஸன்-டயகன், மாடா கபின், மைமுனா குயீ, ஐ ஹைடாரா, ரேச்சல் கான், சாரா மார்டின்ஸ், மேரி-ஃபிலிமெய்ன் என்கா, சபீனிபகோரா, ஃபெர்மைன் ரிச்சர்ட், சோனியா ரோலண்ட், மகாஜியா சில்பர்ஃபீல்ட், ஷெர்லி சவுகனான், அசா சைலா, கரிட்ஜ டூர், மற்றும் பிரான்ஸ் சோப்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேன்ஸ் ஜூரி தலைவர் கேட் பிளாஞ்செட் தலைமையிலான 82 பெண்கள்  சில நாட்களுக்குப் முன்பு  பாலின சமத்துவத்திற்கான தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

-dailythanthi.com