இரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம், திருமணச் சான்றிதழ் – நஜிப் செய்தித் தொடர்பாளர்

ஜாலான் லங்காக் டூத்தா, தாமான் டூத்தாவில் உள்ள நஜிப் துன் ரசாக்கின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரும்புப் பெட்டி வெற்றிகரமாக திறக்கப்பட்டது, அதனுள் பழைய வெளிநாட்டு நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக கூறுகையில், நஜிப்பின் செய்தித் தொடர்பாளர், அதனுள் நஜிப் – ரொஸ்மாவின் திருமணச் சான்றிதழ்களும் இருந்தது என்றார்.

“அது 20 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான ஒரு பெட்டி, அதன் சாவி தொலைந்துவிட்டதால், வலுக்கட்டாயமாக அது திறக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அப்பெட்டியைத் திறப்பதற்குப் போலிசார் சிரமத்தை எதிர்நோக்கியதால், சாவி நிபுணரின் உதவியுடன் அது திறக்கப்பட்டது.

-பெர்னாமா