கோர விமான விபத்து! 100 இற்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலி!

கியூபாவவில் ஏற்பட்ட விமான விபத்தில் 100 இற்கு மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேருடன் பயணத்தை ஆரம்பித்தது.

இந்நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொருங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே இந்த விமான விபத்தில் 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய கியூபாவில் நடந்த விமான விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in