கிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டார்

 

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் மகாதிர் அறிவித்த அவரது முதல் கட்ட அமைச்சரவையில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பெயர் இடம்பெறாதது பெரும் கேள்விக்குறியானது.

இன்று, தாம் புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை என்பதை அவர் தெளிவாகக் கூறிவிட்டார் என்று சைனா பிரஸ் கூறுகிறது.

புதிய அமைச்சரவையில் போதிய டிஎபி திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்று கிட் சியாங் ஸ்கூடாயில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் கூறினார்.

அமைச்சராக விரும்பாத தமது நோக்கத்தை தாம் தெரிவித்து விட்டதாக கூறிய கிட் சியாங், தாம் தொடர்ந்து சிறந்ததோர் மலேசியாவுக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் ஈடுபாட்டுடன் இருக்கப் போவதாக உறுதி அளித்தார்.

இதுவரையில் அறிவிக்கப்பட்ட 13 அமைச்சரவை உறுப்பினர்களில் 4 டிஎபி உறுப்பினர்கள், லிம் குவான் எங் – நிதி அமைச்சர், அந்தோனி லோக் – போக்குவரத்து அமைச்சர், கோபிந்த் சிங் டியோ – தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர், மற்றும் மு. குலசேகரன் – மனிதவள அமைச்சர், இடம் பெற்றுள்ளனர்.