சிரியா போர்: ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது டமாஸ்கஸ்

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின், டமாஸ்கஸை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது.

ஒரு காலத்தில் ஒன்றரை லட்சம் பாலத்தீன அகதிகளுக்கு அடைக்கலமாக திகழ்ந்த யார்மூக் (Yarmouk) மாவட்டத்தையும் மற்றும் அதன் அண்டை மாவட்டமான ஹஜர் அல் அஸ்வத் (Aswad) தையும் கைப்பற்றியதாக தேசிய தொலைக்காட்சி மற்றும் சிரியா செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வெளியேறும் ஒப்பந்தத்தின்படி, ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சிரியாவின் கிழக்கு பகுதிக்கு அழைத்துக் சென்ற பேருந்துகள் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“டமாஸ்கஸும் அதன் சுற்றி உள்ள பகுதிகளும் முழுமையான பாதுகாப்பில் உள்ளது” என்று செய்தி தொடர்பாளர் ஜென் அலி மயூப் சிரியா அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்?

சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்த கதை.

சிரியா போர்: டமாஸ்கஸை முழுமையான கைப்பற்றியது ராணுவம்

போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை அதிபர் அல்-அசாத்தின் ஆட்சியில் உள்ளது குறித்து குற்றச்சாட்டுகளை வைத்தனர். தந்தை ஹஃபீஸிற்கு பிறகு, 2000ஆம் ஆண்டில், அதிபரானார் அல்-அசாத்.

டெர்ரா நகரின் தெற்குப்பகுதியில், 2011ஆம் ஆண்டின் மார்ச் மாதம், அரபு வசந்தத்தால் ஈர்க்கப்பட்ட, ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒரு கண்டன போராட்டம் நடைபெற்றது. இத்தகைய போராட்டங்களை செய்வோரை நசுக்க, அரசு தனது படைகளை பயன்படுத்த, அதிபர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கியன.

சிரியா போர்: டமாஸ்கஸை முழுமையான கைப்பற்றியது ராணுவம்

அமைதியின்மை தொடரத் தொடர, போராட்டங்கள் வெடித்தன. முதலில் தற்காப்பிற்காகவும், பிறகு தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளை விரட்டி அடிக்கவும், எதிரணியை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஏந்தினர். அந்நிய சக்தியின் உதவிகளை பெற்றுள்ள பயங்கரவாதிகளை முழுமையாக நசுக்கி நாட்டின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வருவேன் என்று அதிபர் உறுதிமொழி அளித்தார்.

இந்த வன்முறைகள் மிக விரைவிலேயே அடுத்த நிலைக்கு சென்று உள்நாட்டு போராக மாறியது. அரசின் படைகளை எதிர்கொள்வதற்காக, நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அணிவகுத்தனர். -BBC_Tamil