லிங்-க்கு எதிரான வழக்கை நஜிப் திரும்பப் பெற்றுக்கொண்டார்

 

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்-கிற்கு எதிரான தமது அவதூறு வழக்கை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இதற்கான உடன்படிக்கை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபரிபாலன ஆணையர் டேர்ரில் கூன் முன் செய்யப்பட்டது.

மாற்றம் ஏற்பட்டுள்ள இன்றையச் சூழ்நிலையில் கவனிக்கப்பட வேண்டிய இதர முக்கிய விவகாரங்கள் இருக்கின்றன என்று தாம் நஜிப்புக்கு அளித்த ஆலோசனையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய நஜிப்பின் வழக்குரைஞர் முகமட் ஹபாரிஸாம், இவ்வழக்கின் செலவுத் தொகையாக ரிம25,000 ஐ லிங்-க்கு அளிக்க ஒப்புக்கொண்டோம் என்று தெரிவித்தார்.

லிங்-கின் வழக்குரைஞர் ரஞ்சிட் சிங் இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டது தமது கட்சிக்காரரின் நிலைப்பாடு நியாயமானது என்பதைக் காட்டுகிறது என்றார்.