வெள்ளைக் கொடி விவகாரம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள், வெள்ளை கொடியோடு சென்று சரணடைந்த விடையமும். பின்னர் அவர் கொல்லப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இருப்பினும் அவர்களோடு சென்ற சுமார் 25 பேரில் ஒருவரும் உயிருடன் இல்லை. ஆனால் இதனை மோபைல் போனில் வீடியோவாக எடுத்த ராணுவ சிப்பாய் ஒருவருக்கு, 2009ம் ஆண்டு டிசம்பர்மாதம் பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஏன் எனில் அவர் மோபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது மோபைல் போனில் இருந்து திருடிய ஆட்டோகாரர் ஒருவர். அதனை விலைபேசி கொழும்பில் விற்றார். இதனை முதல் முதலாகப் பெற்ற அதிர்வு இணையம்.

ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட புகைப்படங்களை, இணையப் பரப்பில் முதன் முறையாக வெளியிட்டது பலருக்கு நினைவிருக்கலாம். தற்போது அச்சுறுத்தப்பட்ட ராணுவச் சிப்பாய் பெயர் குறிப்பிட முடியாத ஒரு நாட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்து வரும் நிலையில். இத்தனை ஆண்டுகள் கழித்து அவர், தனது குடும்பத்தாரையும் அன் நாட்டுக்கு அழைத்துள்ளார்.எனவே இனி தன்னால் என்ன நடந்தது என்ற உண்மையைக் கூற முடியும் என்று அவர் கூறியுள்ளார். ஏன் எனில் இனி தனது குடும்பத்தாருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன் நிலையில் வெள்ளைக் கொடி விவகாரம் ஆவணப்படம் ஆக்கப்பட உள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதுவரை எவரும் அறிந்திராத விடையங்கள் அடங்கிய படமாக இது வெளியாக உள்ளது. இதுவும் வரலாற்றில் ஒரு பதிவை ஏற்படுத்தக்கூடிய படமாக அமையும்.

-athirvu.in

TAGS: