சிங்கள தேசம் யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை!

சிங்கள தேசம் தன் இறுமாப்பு மிக்க யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்ததுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் பேயாட்டம் ஆடிய சிங்களபேரினவாதம் இன்னமும் அது தொடர்பில் நியாயப்பாடுகளை ஏற்படுத்தாது பிராயசித்தங்களை தேடிக்கொள்ளாது காலம் கடத்திவரும் நிலையில். அந்த துயரியல் சம்பவத்தின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வில் அழுதகண்ணீர் காய்வதற்கு முன்னரே மீண்டும் ஒரு தடவை தமிழர்கள் மீது சிங்களம் போர்ப்பிரகடனம் செய்யமுயல்வது எவ்விதத்திலும் பொருத்தப்பாடற்றது.

தாயகப் பிரதேசத்தில் வைகாசி18 க்குப் பின் புலிகளின் பெயரால் ஒற்ரைச்சன்னமும் பாவிக்கப் படாத நிலையில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சேயின் கருத்துக்கள் தாங்க முடியாத அவ நம்பிக்கையினையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடல்லாமல் சிங்களம் காத்திரமான மீளினக்கம் நோக்கி நகர்கின்றதா என்ற நியாயப்பாடான சந்தேகங்களையும் எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

சொல்லொன்னா இடர்கள் மற்றும் தீர்க்கப்படாத அவலங்களினூடு பயணிக்கும் ஓர் தேசிய இனத்தின் பால் இப்படியான காழ்ப்புணர்ச்சிகளை ஏவி விடும் மனோநிலை சிங்கள எதேச்சாதிகாரத்தின மேல் கடந்த 4 தசாப்தங்களாக பீடித்திருக்கும் ஓர் இன அழிப்பு நோய் என நாம் கருதவேண்டியுள்ளது.

காலா காலமாகத் தொடரும் சிங்கள தேசத்தின் இன அழிப்புப் பொறிமுறையானது தமிழர்கள் மேல் கொட்டியுள்ள வக்கிரங்களின் மேல் அமர்ந்து கொண்டு ஒரு தேசிய இனத்தின் அவலங்களோடு பகடையாடுவதானது “தனித்தே பயணிக்க வேண்டும்” என்ற தவிர்க்கமுடியாத மனோபாவத்திற்கு எம்மைத் தள்ளி விடுமெனவும் எச்சரிக்கின்றோம்.

அப்படியான ஒரு சூழல் இலங்கைத் தேசம் நிலைமாறு கால நீதி, பொறுப்புக்கூறல் என்பவற்றில் கொண்டுள்ள உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவோடு, தனது பௌத்த சிங்கள எதேச்சாதிகாரத்தைக் கொண்டு ஏற்கனவே இழைக்கப்பட் அநீதிகளுக்காக தமிழரிடம் மன்னிப்புக் கோர வேண்டிவரும்.

சாம்பல் மேடுகளில் தூங்கிக்கொண்டிருக்கின்ற பறவைகளை இராணுவ மனோநிலையில் அணுகுவது விபரீதமான விரும்பத்தகாத பேரிடர்களையே ஏற்படுத்தும் என்பதை சிங்களம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.in

TAGS: