போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5 பேர்.. ஐவர் படுகாயம்.. பெரும் சோகத்தில் தூத்துக்குடி!

தூத்துக்குடி: போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று 100வது நாள் போராட்டத்தை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஓட்டம் பிடித்த போலீசார்

இதையடுத்து காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்ததால் போலீசார் ஓட்டம் பிடித்தனர்.

3 முறை துப்பாக்கிச்சூடு

இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

அடையாளம் தெரிந்தது

5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள், மணிராஜ், க்ளாஸ்டன், தமிழரசன், கந்தையா, சண்முகம் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

பலர் மருத்துவமனையில்

குண்டு காயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2-வது மற்றும் 3-வது முறை போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனிடையே நடைபெற்ற தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: