நடிகர் ஜெட்லீயா இது! நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா!

சீனாவில் இருந்து ஹாலிவுட் சென்று கலக்கியவர்கள் ஒரு சிலர் தான். அந்த வகையில் ஜாக்கிஜானை தொடர்ந்து ஹாலிவுட் சென்று கலக்கிய சீன நடிகர் ஜெட்லீ.

இவர் தற்போது hyperthyroidism என்ற நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் வயதானது போல் ஆகியுள்ளார்.

இவரிடம் புகைப்படம் எடுத்த ரசிகர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டது மட்டுமில்லாமல், அவரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர், அதுமட்டுமின்றி பலரும் இது ஜெட்லீ இல்லை என்றும் கூறி வருகின்றனர், எது உண்மை என்று தெரியவில்லை.

-cineulagam.com