கொடூர தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் பட்டியல்.. முழு விவரம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் இரு பெண்கள் உள்பட 9 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது விவரம் இதோ….

1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)

2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)

3)கந்தையா (சிலோன் காலனி – தூத்துக்குடி)

4) வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி

5) தமிழரசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை – தூத்துக்குடி)

6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)

7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)

8) மணிராஜ் தூத்துக்குடி 9) வினிதா (29)

tamil.oneindia.com

TAGS: