ஆளுனரை மிரட்டிய மூசா அமானுக்கு போலீஸ் வலைவீச்சு

சாபா  முன்னாள்   முதலமைச்சர்   மூசா   அமான்,  மாநில     ஆளுனர்    ஜுஹார்   மஹிருடினை  மிரட்டினார்   என்ற  புகார்களின்பேரில்   போலீஸ்   அவரைத்   தேடி   வருகிறது.

மூசா   இருக்குமிடம்   தெரியவில்லை    என்றும்   வாக்குமூலம்   பெறுவதற்காக   அவரைத்    தேடி  வருவதாகவும்   சாபா   போலீஸ்    தலைவர்    ரம்லி   டின்  தெரிவித்ததாக   ஸ்டார்   ஆன்லைன்     கூறியது.

“இன்னமும்   தேடிக்  கொண்டிருக்கிறோம்”,  என்று  ரம்லி   கூறினார்.

மே 9ஆம்  நாள்   தேர்தலுக்குப்   பின்னர்   நிகழ்ந்த   அச்சம்பவம்    தொடர்பில்   போலீசார்    ஜுஹார்  உள்பட   ஒன்பது   பேரிடம்   வாக்குமூலம்   பதிவு   செய்துள்ளனர்.

மூசா  மே  10-இல்   சாபா   முதலமைச்சராக   பதவி  உறுதிமொழி     எடுத்துக்கொண்டார்.   ஆனால்,  மாநிலச்   சட்டமன்ற    உறுப்பினர்கள்  சிலர்   கட்சித்தாவியதை    அடுத்து   அவரது   அரசு    கவிழ்ந்தது.

அதைத்  தொடர்ந்து   முகம்மட்  ஷாபி   அப்டால்  முதலமைச்சராக்கப்பட்டார்.   ஷாபியின்   நியமனம்      செல்லாது   என்று    அறிவிக்கக்கோரி   மூசா  ஆளுனரிடம்   மனு  கொடுத்துள்ளார்.