ரபிடா அசிஸ்: 100 நாள் காலைக்கெடு முட்டாள்தனமானது

 

பக்கத்தான் ஹரப்பான் அதன் பத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அளித்துள்ள நூறு நாள் காலக்கெடு முட்டாள்தனமானது என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் கூறுகிறார்.

ஏன் 100 நாள்கள்? ஏன் அது ஒரு வருடமாக இருக்கக்கூடாது?, என்று பிஎப்எம் வானொலி நிலையத்துடனான ஒரு நேர்காணலில் அவர் கூறினார்.

இந்த முட்டாள்தனமான நூறு நாள் காலக்கெடுவை அகற்றி விட்டால், நாம் தெளிவான காட்சியைக் காண முடியும். நூறு நாள்களில் எதையும் செய்துவிட முடியாது என்று கூறிய ரபிடா, இந்த உலகில் எந்த ஒரு நாடும் நூறு நாள்களில் எதையும் செய்துவிட முடியாது என்றார்..

சில சீர்திருத்த நடவடிக்கைகளை குறுகிய காலக்கெடுவில் செய்ய முடியும். இடைக்கால மற்றும் நீண்ட கால இலக்குகளும் இருக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

தேவைப்படும் போது மகாதிரின் நிருவாகத்திற்கு தமது ஆலோசனைகளை அளிக்க முடியும் என்றும் அவர் கூறினா.

ஆனால், தமது ஆலோசனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.