மே 30 இல் கட்ட வேண்டிய 1எம்டிபியின் ரிம143.75 மில்லியன் கடனை அரசாங்கம் கட்டும், நிதி அமைச்சர் கூறுகிறார்

 

1எம்டிபி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்ட வேண்டிய ரிம145.75 மில்லியன் கடனை அரசாங்கம் கட்டும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பட்டியல்படி நாங்கள் கட்டுவோம். அரசாங்கம் இதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. ஆகவே, நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாரவர்.

1எம்டிபியின் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமி 1எம்டிபியின் உண்மையான நிதி நிலைமை பற்றி தமக்குத் தெரிவிக்கா விட்டால், 1எம்டியின் இந்தக் கடனை கட்டுவதற்கு அனுமதிக்கும் பத்திரத்தில் தாம் கையொப்பமிடப் போவதில்லை என்று லிம் நேற்று கூறியிருந்தார்.

ஏப்ரல் 2017 லிருந்து 1எம்டிபியால் கடனைக் கட்ட முடியவில்லை. அக்கடனை கட்டுவதற்கு அரசாங்கம் ரிம6.9 பில்லியனைக் கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று, அருளை முன்னாள் 1எம்டிபி தலைமை நிதி அதிகாரி அஸ்மி தாகிர் மற்றும் முன்னாள் சட்ட ஆலோசகர் இவான் சென் ஆகியோருடன் லிம் சந்தித்தார்.

அதன் பின்னர், 1எம்டிபி அந்தக் கடனைக் கட்டுவதற்கான தொகையைக் கொடுக்க முடியமா என்பது பற்றி எழுத்து மூலம் அமைச்சுக்கு தெரிவிக்கும்படி அருள் கந்தாவுக்கு லிம் உத்தரவிட்டார்.