‘காலா’ கர்நாடகத்தில் தடை!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்தினை கர்நாடக மாநிலத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினிகாந்த் பேசியுள்ளதால், அவர் நடித்துள்ள காலா படத்தினை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்பதில்லை என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவெடுத்துள்ளது.

காலா திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கின்றது. இந்த நிலையிலேயே, கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-4tamilmedia.com