தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் யாழில் இப்படியெல்லாம் நடக்குமா?

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையம் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என பொதுமக்கள் கோபத்துடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் குறித்த ஆலயத்தில் நேற்று (06.06.2018) காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் படை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்து அவர்களை தேரை இழுக்க அனுமதிக்கவில்லை.

அத்துடன் தேரை இழுக்கும் சக்தி (ஆட்கள் பலம்) அவர்களிடம் காணப்படவில்லை, இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை உலகெங்கும் வாழும் இந்து மத மக்களுக்கு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த காலப்பகுதியில் சாதிகள் போன்ற பிரிவினைவாதங்கள் இல்லாமால் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம், தற்போது தலைவர் பிரபாகரன் இல்லாததால் எங்கள் இனம் பின்னோக்கிய சிந்தனையில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இலங்கையில் சிங்கள மக்களுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் நாம் பல உயிர்களை கடந்த யுத்தத்தில் இழந்த நிலையில் ஒரு நிரந்திர தீர்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இல்லாமல் எங்களுக்குள் சாதிகள், மதங்கள் என்று மோதிக்கொண்டாள் எங்கள் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கோபங்களுடனானா ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: