நான் அரசியல்வாதிதான்… காலா இயக்குனர் ரஞ்சித் அதிரடி!

நீங்கள் இயக்குநரா? அரசியல்வாதியா? என்ற கேள்விக்கு, நான் அரசியல்வாதி என இயக்குனர் ரஞ்சித் அதிரடி பதில் கொடுத்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைபடம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. காவிரி விவகாரம் மற்றும் தூத்துக்குடி போராட்டம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை நடிகர் ரஜினி கூறியதால் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் காலா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் எதிர்ப்பினையும் மீறி இன்று வெளியாகியுள்ள காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ரஞ்சித், ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம் என கூறியதோடு, காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

மேலும், நீங்கள் இயக்குநரா? அரசியல்வாதியா? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் அரசியல்வாதி என இயக்குனர் ரஞ்சித் அதிரடி பதிலளித்துள்ளார்.

-athirvu.in