ஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி ஆச்சர்யப்படுத்திய டிரம்ப்

முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவோடு இணைந்து கொண்டதை தொடர்ந்து ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தின் ஏற்பாடு, பிற நாடுகளின் மீது வர்த்தக தடைகளை விதித்திருப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படும் என்று தோன்ற செய்கிறது.

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெறுகிறது.

60 சதவீத உலக அளவிலான நிகர மதிப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.

உலக அளவிலான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டாலும், பொருளாதாரம்தான் நிகழ்ச்சிநிரலில் முதன்மை பெறுகிறது.

உச்சிமாநாட்டுக்கு வந்து சேர்ந்த டிரம்ப், இந்த கூட்டம் அளவில் குறைந்துவிட்டதில் வருத்தப்படுவதாக கூறியுள்ளார். இதனால் பிற பிரச்சனைகளில் இதர உறுப்பினர்களுடன் அவரை முரண்படும் சாத்தியத்தை காட்டுகிறது.

கூட்டத்திற்கு முன்னர் நடைபெற்ற பரிபாற்றங்கள்

அதிபர் டிரம்ப் அமெரிக்காவை தனிமைப்படுத்தி கொண்டால், பிற 6 நாடுகளும் தங்களின் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். இந்த 6 நாடுகளும் மதிப்பீடுகளை பிரதிநிதித்துகின்றன. வரலாற்று வலிமை வாய்ந்ததும், இப்போது உண்மையான சர்வதேச தூண்டுதலை வழங்குகின்ற பொருளாதார சந்தையை இந்த 6 நாடுகளும் கொண்டுள்ளன என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

அதிபர் டிரம்போடு சகோதரத்துவ அணுகுமுறை வைத்திருந்த, ஜி7 உச்சி மாநாட்டை நடத்துகின்ற கனடா நாட்டின் பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவும், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையை முடங்கியுள்ளதால் சமீபத்தில் மோதுகின்ற மனப்பான்மையோடு காணப்படுகிறார்.

எஃகு மற்றும் அலுமினியம் மீது வரி விதித்திருப்பதை நியாப்படுத்துவதற்கு தேசிய பாதுகாப்பை காரணம் காட்டியிருப்பது சிரிக்கக்கூடியதாக இருக்கிறது என்று ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.

ட்ரூடோவை கோபம் கொள்பவர் என்றும், ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும் அமெரிக்காவுக்கு லாபமற்ற வரிகளை உருவாக்கியுள்ளதாகவும் டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். -BBC_Tamil