இயக்குநர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சிக்கிறது.. பாரதிராஜா பரபர குற்றச்சாட்டு

சென்னை: இயக்குநர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக இயக்குநர் பாரதி ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். அப்போது அவரது பேச்சு எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக இயக்குநர் அமீர் மற்றம் தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் அமீருக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக இயக்குநர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இயக்குநர்கள் பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய பாரதி ராஜா, இயக்குநீர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது என குற்றம்சாட்டினார். ஜனநாயக நாட்டில் பத்திரிக்கை உரிமை ஒடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

tamil.oneindia.com