மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்.. அதிரவைக்கும் ரிசர்வ் வங்கி ஆய்வு..! மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்.. அதிரவைக்கும் ரிசர்வ் வங்கி ஆய்வு..!

2019 பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரம் குறித்து முக்கியமான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட 48 சதவீதம் பேர் 2018இல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இதுதான் உண்மை நிலை

டிசம்பர் 2016இல் செய்யப்பட்ட இதே ஆய்வில் 38 சதவீத மக்கள் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது, கடந்த இரு வருடங்களை ஒப்பிடுகையில் மே 2018இல் சுமார் 48 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு நிலை

2016இல் 38 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 2017இல் 44 சதவீதமாகவும், மே 2018இல் இதன் அளவீடு 48 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

விலைவாசி

மேலும் 88 சதவீத மக்கள் கடந்த ஒரு வருடத்தில் விலைவாசி அதிகளவில் அதிகரித்துள்ளது என்றும், இனி வரும் மாதங்களில் விலைவாசி கூடுதலாக அதிகரிக்கும் என 83 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

சாமானியர்கள்

அதேபோல் இனிவரும் காலத்தில் பணவீக்கம், மத்திய அரசின் விலை நிர்ணயம் ஆகியவற்றின் மூலம் சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஆய்வில் பங்குபெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு

இந்த ஆய்வு நாட்டின் 6 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி பெங்களுரூ, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லியில் செய்யப்பட்டது, இந்த ஆய்வில் சுமார் 5,077பேர் கலந்துகொண்டனர்.

ரிசர்வ் வங்கி

நாட்டின் பொருளாதாரம் மற்றும் விலைவாசிகள் பற்றி மக்களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ளக் காலாண்டு அடிப்படையில் ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தியது.

tamil.goodreturns.in

TAGS: