பிஎன்னுக்கு மேலும் ஓர் இடி: சரவாக் பிஎன் கலைப்பு, புதிய கூட்டணி உருவாக்கம்

சரவாக்  பிஎன்னில்     நான்கு  பங்காளிக்   கட்சிகள்   விலகிக்  கொண்டதை   அடுத்து   அது   கலைக்கப்பட்டது.

விலகிய   நான்கும்  -பிபிபி,  எஸ்யுபிபி,  பிஆர்எஸ்,  பிடிபி-   சேர்ந்து  “Gabungan Parti Sarawak” (ஜிபிஎஸ்)”   என்ற  பெயரில்   புதிய  மாநிலக்   கூட்டணி  ஒன்றை   உருவாக்கிக்   கொண்டுள்ளன.

சரவாக்   முதலமைச்சரும்   சரவாக்    பிஎன்   தலைவருமான    ஆபாங்   ஜொகாரி   ஓபெங்   இன்று  பிற்பகல்,  கூச்சிங்கில்   பிபிபி    தலைமையகத்தில்  இதை    அறிவித்தார்.

அப்போது     முன்னைய   சரவாக்   பிஎன்   தலைவர்களும்   உடன்    இருந்தனர்.

“சரவாக்   பிஎன்  உறுப்புக்கட்சிகள்   பிஎன்னிலிருந்து  விலகுவது    என  ஒருமித்த   முடிவெடுத்து   சரவாக்  கட்சிகளைக்   கொண்ட   புதிய    கூட்டணியை    காபோங்கான்  பார்டி   சரவாக்  என்ற   பெயரில்   அமைத்துள்ளன.

“பல வாத,  எதிர்வாதங்களுக்குப்  பிறகு   14வது   பொதுத்   தேர்தலுக்குப்   பிந்திய    அரசியல்   நிலவரங்களைக்   கருத்தில்கொண்டு   அம்முடிவு    எடுக்கப்பட்டது”,  என்றாரவர்.