நாட்டின் தலைமை நீதிபதி பதவி விலகல்

துன் ராவுஸ் ஷெரீஃப், நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிய வேளை, சுல்கிஃப்ளி அகமட் மகினுடின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு அவர்கள் இருவரும் பதவி விலகல் கடிதங்களை அனுப்பியுள்ளதாகக் கூட்டரசு நீதிமன்றம் கூறியுள்ளது.

அவ்வறிக்கையின்படி, அவர்களின் பதவி விலகல் எதிர்வரும் ஜூலை 31-ம் தேதி அமலுக்கு வரும்.

கடந்த மே 15-ம் தேதி, ராவுஸ் மற்றும் சுல்கிஃப்ளி இருவரும் பிரதமரைச் சந்தித்து, தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர் என்றும் தலைமை பதிவாளர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“எனினும், அனைத்து நீதித்துறை சார்ந்த விவகாரங்களைத் தீர்க்கும் வகையில், சிறிது கால அவகாசத்திற்குப் பின்னர் பதவி விலகுவதாக அவர்கள் பிரதமரிடம் கூறியதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.