இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி: மாவை சேனாதிராஜா

இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையானது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

“இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் எதிர்க்கும். அதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வெளிப்படுத்துவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். இதனையடுத்து, சர்ச்சைகள் எழுந்திருந்தன. அது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: