மகாதிரின் திறந்த இல்ல ஹரி ராயா உபசரிப்பில் 50,000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

 

ஹரி ராயாவை முன்னிட்டு புத்ரா ஜெயாவில் பிரதமர் மகாதிர் அவரது ஶ்ரீ பிரடானா இல்லத்தில் இன்று அளித்த திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

15 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், மகாதிர் அளித்த முதல் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டவர்கள் மகாதிரை பார்ப்பதில் ஆர்வம் காட்டினர்.

ஶ்ரீ பிரடானாவுக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் மக்கள் பெருமளவில் வரிசைப் பிடித்து நின்றனர். அங்கு அவர்கள் பிரதமரையும் அவருடைய அமைச்சர்களையும் கைகுலுக்கி பேசுவதற்கு வசதியாக இருந்தது.

இதற்கு முன்பு, இந்நிகழ்ச்சி ஶ்ரீ பிரடானாவுக்கு உள்ளே நடத்தப்பட்டது.

இன்றய நிகழ்ச்சியில் 50,000க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் நடந்த இந்த திறந்த இல்ல நிகழ்ச்சிகளுக்கும் இன்றய நிகழ்ச்சிக்கும் இடையில் ஒரு வேறுபாட்டை மலேசியாகினி கண்டது. இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள். நஜிப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மலாய்க்காரர்கள்.