காலா லாபமா, நஷ்டமா? படக்குழு தரப்பிலிருந்து வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

காலா படம் வெளிவந்து பல திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றி நடைப்போடுகின்றது. அப்படியிருந்து ஒரு சிலர் காலா நஷ்டம் தான் என கூறி வருகின்றனர்.

நம் தளத்திலேயே ஒரு பத்திரிகையாளர் காலா நஷ்டம் என்று குறிப்பிட்டதை கூறியிருந்தோம், இதுக்குறித்து இயக்குனர் ரஞ்சித் மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘காலா படம் எடுத்ததே சிறு பட்ஜெட்டில் தான்(மற்ற ரஜினி படங்களை ஒப்பிடும் போது), அந்த வகையில் தனுஷ் இப்படத்தை மினிமம் கேரண்டியில் விற்கவில்லை.

எந்த விநியோகஸ்தர்களும் கஷ்டப்பட கூடாது என்று குறைந்த விலைக்கு தான் விற்றோம், வசூல் குறைவு என்றாலும் யாருக்குமே நஷ்டம் இல்லை, சேலத்தில் தான் ஒரு திரையரங்க உரிமையாளர் எங்களுக்கு இனி லாபம் தான் என்று குறிப்பிட்டார், அதனால், காலா வெற்றிப்படம் தான்’ என ரஞ்சித் கூறியுள்ளார்.

-cineulagam.com