உங்கள் கருத்து: அல்டான்துயாவுக்கு நீதி கிடைக்குமா?

‘சிருலைவிட   கொலைக்குச்   சூத்திரதாரி  யார்  என்பதைக்  கண்டறிவது  முக்கியம்’

விஜய்47: தற்காக்கும்   வழியற்ற  அல்டான்துயாமீது   பயன்படுத்தப்பட்ட   சி4   எப்படி  வெடித்துச்  சிதறியதோ  அப்படித்தான்   இக்  கொலை  வழக்கு   மீதான  மறுவிசாரணையும்  ஒரு  பெரிய   அதிர்வெடிப்பாக   அமையும்.    அதில்,   சம்பந்தப்பட்டவர்களின்     வண்டவாளங்கள்    தண்டவாளம்   ஏறும்.

அதிலிருந்து     தற்காப்பு   அமைச்சு,  போலீஸ்,  அரசுத்தரப்பு,  எதிர்த்தரப்பு   வழக்குரைஞர்கள்  ஏன்,   நீதித்துறைகூட    தப்பிக்காது.  அல்டான்துயா   வழக்கு  விசாரணைக்கு   வந்தபோது  அது   ஒரே  ஒரு   நோக்கத்தையே  அது   கொண்டிருந்ததுபோல்   தோன்றுகிறது.  ஒரு   ஆளைப்  பலிகடாவாக்கி   உள்ளே   தள்ள   வேண்டும்,  விரைவில்   எல்லாம்   மறக்கப்பட்டு  விடும்   என்ற  தோரணையிலே  மொத்த   வழக்கு  விசாரணையும்  நடத்தப்பட்டதுபோல்   தோன்றுகிறது.

சிருல்  அஸ்ஹார்  உமரும்,   அஸிலா  ஹட்ரியும்   அவர்களுக்கு  இடப்பட்ட    உத்தரவின்படிதான்    நடந்து  கொண்டிருக்கிறார்கள்    என்பது   தெளிவு..   ஆனால்,  அது    அவர்களுக்கான    தண்டனையைக்  குறைப்பதற்கு   ஒரு  காரணமாக   அமையாது.  ஏனென்றால்    அவர்கள்   செய்த  கொலை   அவ்வளவு  கொடூரமானது.

இதில்,  ஆச்சரியத்திலும்   ஆச்சரியம்.   என்னவென்றால்,   வழக்கின்போது   ஒருவர்கூட  வாய்  திறந்து  ‘உங்களுக்கு   உத்தரவிட்டது  யார்?’   என்று    கேட்காததுதான்.

இறந்து  போனவர்கள்  திரும்பிவந்து   இரகசியங்களை  வெளியிடப்போவதில்லைதான்.  ஆனால்.   செய்த  கர்மம்  விடாது. சாகும்வரை   துரத்தி  வந்துத்  தாக்கும்.

அமைதி:  இந்த   வழக்கில்    தெரிய   வேண்டிய  விசயங்கள்    எவ்வளவோ   உள்ளன.  உள்துறை   அமைச்சு,  தற்காப்பு   அமைச்சு    ஆகியவற்றின்   பங்கு  குறித்து   சந்தேகங்கள்    எழுகின்றன. என்ன   நடந்தது   என்பது    நமக்குத்  தெரிய   வேண்டும்.

இப்போது   புதிய   அரசாங்கத்தின்கீழ்   செயல்படும்   அவ்விரு   அமைச்சுகளும்   நடந்தது    என்னவென்பதைத்   தெரிவிக்க     முன்வருமா?   யார்   அந்தச்  சூத்திரதாரி,  கொலை   செய்யும்   உத்தரவு    எந்த   வழியில்   கொலையாளிகளைச்    சென்றடைந்தது  போன்ற   விவரங்கள்    தெரிய   வேண்டும்.

இதில்   சம்பந்தப்பட்ட    அனைவரும்  இழுத்துக்  கொண்டுவரப்பட்டு   விசாரிகக்ப்பட    வேண்டும்.

சாமானிய  மலேசியன்:  ஆம்.  சூத்திரதாரி  யார்   என்பதையும்   அல்டான்துயா  கொலைக்கான   காரணமும்    தெரிந்தாக  வேண்டும்.

சூத்திரதாரியும்   கொலைக்கான   காரணமும்    தெரிந்ந   பின்  மற்றவற்றைக்  கண்டறிவது    எளிது.

பெயரிலி  770241447347646: சிருல்   முழு  மன்னிப்பு   கொடுத்தால்தான்  வாய்  திறந்து   பேசுவார்.   அவரை   ஆஸ்திரேலியர்களே  வைத்துக்கொள்ளட்டும்.  நம்மிடம்  அஸிலா  உள்ளார். அவர்  நமக்குப்  பயன்படுவார். கொலை  செய்ய   உத்தரவிட்டவர்   யார்   என்பது   அவருக்குத்   தெரிந்திருக்கும்.

இது  ஒரு   சின்ன  வழக்கு. போலீசுக்கு      மொத்த   உண்மையும்   நிச்சயமாக தெரிந்திருக்கும். வழக்கின்போது      சில   கேள்விகள்      கேட்பது    கோளாறாகிவிடும்  அது  வேறு  சிலரையும்   குற்றச்செயலுடன்   தொடர்புப்படுத்திக்  காட்டும்     என்பதால்     அவை     வேண்டுமென்றே   தவிர்க்கப்பட்டன.

வழக்குக்கு    மலேசியாவிலேயே  ஆதாரங்கள்   டன் கணக்கில்  கிடைக்கும்.  சாட்சிகளும்  கிடைப்பார்கள்.  அரசியல்   உறுதிதான்   தேவை.  முந்தைய   அரசாங்கத்திடம்   அது  இல்லை.

இப்போதைய  பக்கத்தான்   ஹரப்பான்   அரசாங்கத்திடம்   அது    உள்ளதா?

பெயரிலி _db56f03b:  இனியும்  காத்திருக்க   முடியாது.  பிடித்து   வாருங்கள்   அவர்களை.

அல்டான்துயாவின்   தந்தை  மகாதிரைச்   சந்திக்கிறார்

பெயரிலி_b497ffa7:  செதேவ்  ஷாரீபு,   மகளின்  கொலைவழக்குப்   பாரபட்சமின்றி    முறையாக  நடக்க  வேண்டும்,   கொலைக்கு    உத்தரவிட்டவரைக்  கண்டறிய    வேண்டும்   என்பதற்காக   பிரதமரைச்   சந்திக்க  விரும்புகிறார்.

மக்களாகிய    நமக்கும்   உண்மை    தெரிய   வேண்டும்.  எதற்கா  சி4  பயன்படுத்தப்பட்டது?  குடிநுழைவுத்துறை     ஆவணங்கள்   அழிக்கப்பட்டது   ஏன்?  ஏன்   எல்லாச்   சாட்சிகளும்  விசாரணைக்கு   அழைக்கப்படவில்லை? மரண  தண்டனை  விதிக்கப்படும்    என்று    தெரிந்தும்   இரண்டு   போலீஸ்    அதிகாரிகளும்   அக்கோடூரச்   செயலைச்  செய்ய  துணிந்தது   ஏன்?

முக்கியமாக,   கொலைக்கு    உத்தரவிட்டது   யார்?

பெயரிலி_82169d69:  கொலைக்காரர்களுக்கு   அவர்களின்  ‘சேவைக்கு’க்  கைமாறாக    என்ன  கொடுக்கப்பட்டிருக்கும்?

பெயரிலி 2456541485523213: சட்ட  ஆளுமையே  நாட்டில்  இல்லாமல்   போய்விட்டது.  இது  யாருக்கு   வேண்டுமானாலும்   நடக்கலாம். நினைக்கவே  பயமாக   இருக்கிறது.

எல்லா     அரசியல்  கட்சிகளும்   கொலைக்குக்  காரணமாக   இருந்தவரைக்  கண்டறிய  அரச  விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ)  அமைக்க     அழுத்தம்   கொடுக்க   வேண்டும்.

நியாயவான்:   போலீஸ்   விசாரணைக்கு    ஆர்சிஐ  மேல்.