2 நாளில் அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி..

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் மக்கள் சென்ற படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 215 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் கலவரம் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

அவர்கள் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக செல்கின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய தரைக்கடல் வழியாக 100 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு மரப்படகு சென்றது.

திரிபோலி என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. அதில் 95 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். 5 பேர் மட்டும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வருகின்றனர்.

அதே நேரத்தில் மத்திய தரைக்கடலில் 130 பேருடன் சென்ற மற்றொரு படகும் மூழ்கி விபத்துக்குள்ளானது. அதில் படகில் இருந்த 60 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் லிபியாவிற்கே அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்கிடையே விபத்து நடந்த அடுத்த நாள் திரிபோலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காரபுலி என்ற இடத்தில் ரோந்து சென்ற கடற்படையினர் 50 பேரின் உடல்களை கண்டுபிடித்தனர்.

மேலும் கடற்கரையின் மற்றொரு பகுதியில் 165 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மொத்தத்தில் 2 நாளில் 215 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in