போதைப் பொருள் வாங்க தெருவில் பிச்சை எடுத்து, குப்பை பொறுக்கிய பிரபல நடிகர்

மும்பை: போதைப் பொருள் வாங்குவதற்காக பிரபல நடிகர் சஞ்சய் தத் பிச்சை எடுத்திருக்கிறார்.

பல சர்ச்சைகளில் சிக்கியவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். சர்ச்சைகளின் செல்லப் பிள்ளையான அவரின் வாழ்க்கை வரலாற்றை ராஜ்குமார் ஹிரானி சஞ்சு என்ற பெயரில் படமாக்கியுள்ளார்.

நாளை ரிலீஸாகும் இந்த படத்தில் ரன்பிர் கபூர் சஞ்சய் தத்தாக நடித்துள்ளார்.

போதை

சஞ்சய் தத் போதைப் பொருளுக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். போதைப் பொருள் வாங்க அவர் தெருவில் பிச்சை எடுத்துள்ளார் என்று ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.

நண்பர்

கொஞ்சம் போதைப் பொருள் கொடுங்க என்று அதை விற்பனை செய்தவர்களிடம் எல்லாம் கெஞ்சியிருக்கிறார் சஞ்சய் தத். அதன் பிறகு 12 நாட்கள் நடந்தே ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். நண்பரிடம் பணம் கடன் வாங்கி போதைப் பொருள் வாங்க அங்கு சென்றார் என்கிறார் ரன்பிர் கபூர்.

தேவை

போதைப் பொருள் இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. குப்பையில் இருந்து ஏதாவது கிடைக்காதா என்று கூட குப்பையை பொறுக்கியுள்ளார் சஞ்சய் தத். கஷ்டப்பட்டு தான் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்தார் என்று ரன்பிர் கூறியுள்ளார்.

10 ஆண்டுகள்

கல்லூரியில் படித்தபோது போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர எனக்கு 10 ஆண்டுகள் ஆனது. போதை பழக்கத்தில் இருந்து வெளியே வர வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

tamil.filmibeat.com