ஹரப்பான் சட்டப் பிரதிநிதிகள் எம்ஏசிசி-இடம் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள்

ஆளும்கட்சியின்   சட்டப்   பிரதிநிதிகள், அமைச்சர்கள்   உள்பட,  அவர்களின்   சொத்து  விவரங்களை    எம்ஏசிசி-இடம்    அறிவித்தாக    வேண்டும்.

இதைத்   தெரிவித்த   பிரதமர்  டாக்டர்   மகாதிர்   முகம்மட்,    பிரதமர்,  துணைப்  பிரதமர்  உள்பட   அனைவரும்  நிர்வாகத்  துறை  உறுப்பினர்களாகவே   கருதப்படுவார்கள்   என்றும்   எவரும்   சட்டத்துக்கு   அப்பாற்பட்டவர்கள்   அல்லர்   என்றும்   சொன்னார்.

“முன்பு  ஒரு  (நீதிமன்றத்)   தீர்ப்பு   பிரதமர்   நிர்வாகத்துறை   உறுப்பினர்   அல்ல   என்று  கூறியது.  ஆனால்,  நாங்கள்   பிரதமரும்  துணைப்  பிரதமரும்   அமைச்சர்களும்   ஆளும்கட்சி    சட்ட  பிரதிநிதிகளும்   நிர்வாகத்துறை   உறுப்பினர்களே   என்று   முடிவு   செய்திருக்கிறோம்.

“யாரும்  விலக்கல்ல.  எல்லாருமே  சொத்துகளையும்   வருமானத்தையும்    அறிவித்தாக   வேண்டும்”,  என  மகாதிர்  இன்று   பிரதமர்   அலுவலகத்தில்   செய்தியாளர்  கூட்டமொன்றில்   கூறினார்.