பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் செம்பருத்தி ‘மக்கள் தொண்டன்’ டேவிட்டை நினைவுகூர்கிறது

‘ஞாயிறு’ நக்கீரன், மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு, செம்பருத்தி இணைய இதழ் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

22 ஆண்டுகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற மகாதீர், தானாக பதவி விலகினார். அப்படிப்பட்டவர், பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நாடாள வந்துள்ளார். தொண்ணூற்று மூன்று வயதில் இரண்டாம் தவணையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள ஒரேத் தலைவர் உலக அளவில் இவர் ஒருவர்தான்.

அப்படிப்பட்ட தலைவருக்கு செம்பருத்தி இணைய ஏடு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளை, மக்கள் தொண்டன் டேவிட்டையும் செம்பருத்தி இன்று நினைவு கூர்கிறது. பாட்டாளித் தலைவனான வி.டேவிட்டின் அரசியல் வாழ்க்கை எதிர் அணி முகாமிலேயே கரைந்து போனது. மலேசிய தேசிய அரசியலில் எதிர் அணி முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்த வேளையில் இப்படிப்பட்ட தலைவர் இல்லாமல் போனது வரலாற்று சோகம்தான்.

எது எவ்வாறாயினும் அந்த மக்கள் தொண்டனின் கைம்மாறு கருதாத அரசியல் கடப்பாட்டையும் சமூகத் தொண்டையும் செம்பருத்தி வாஞ்சையுடன் நினைவு கூறுகிறது