ஜோ லோவைப் பிடிப்பதற்கு மக்காவ் உதவி நாடப்பட்டது

மலேசிய   போலீஸ்    தன்னிடம்  சிக்காமல்   தப்பி  ஓடிக்கொண்டிருக்கும்   தொழில்  அதிபர்  ஜோ  லோவைப்  பிடிப்பதற்கு  உதவுமாறு   மக்காவ்  போலீசாரை      கேட்டுக்கொண்டுள்ளது.

1எம்டிபி  ஊழல்     மீதான   விசாரணைக்கு    ஜோ  லோ   பெரிதும்   உதவுவார்   என்று   நம்பப்படுகிறது.   அவர்   ஹாங்காங்கில்   இருப்பதை    அறிந்து  போலீசார்   அங்கு  விரைந்தனர்.  ஆனால்,  அவர்   அங்கிருந்து  மக்காவுக்குத்    தப்பி  ஓடி  விட்டதாகத்     தெரிகிறது.

மலேசியா   இப்போது   மக்காவ்   போலீசின்  பதிலுக்காகக்  காத்திருக்கிறது.

“மக்காவுக்கு  போலீஸ்   குழுவை  இன்னும்   அனுப்பவில்லை. அவர்களின்  பதிலுக்குக்  காத்திருக்கிறோம்”,  என  இன்று   கோலாலும்பூரில்   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ் (ஐஜிபி)  முகம்மட்  பூஸி  ஹருன்   கூறினார்.