பிரதமர்: எம்பி சம்பளம் உயர்த்தப்படாது மாறாக, ஜிஎல்சி போஸ்கள் சம்பளம் குறைக்கப்படும்

எம்பிகள்   மற்றும்      தனியார்துறை  சம்பளத்தில்   நிலவும்  பெரிய  இடைவெளியைக்  குறைக்கும்   முயற்சியாக   தனியார்  துறை,  குறிப்பாக   அரசுத்  தொடர்புடைய  நிறுவனங்களில்(ஜிஎல்சி)  சம்பளம்  குறைக்கப்படும்.

“தனியார்   துறையுடன்  ஒப்பிடும்போது   எம்பிகளின்  சம்பளம்   குறைவு  என்பது   எனக்குத்    தெரியும்”,  எனப்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்   முகம்மட்    இன்று   எம்ஏசிசி    தலைமையகத்தில்     செய்தியாளர்கள்   கூட்டமொன்றில்  கூறினார்.

“தனியார்  துறையைவிட      சம்பளம்  மிகக்   குறைவாக   இருப்பது   எங்களுக்குப்  பிடிக்கவில்லை.  அதனால்  தனியார்  துறையின்   சம்பளத்தைக்  குறைக்கப்   போகிறோம்”, என்றவர்  சிலேடையாகக்  குறிப்பிட்டதும்  செய்தியாளர்     கூட்டத்தில் வெடிச் சிரிப்பு பீறிட்டது.

“ஜிஎல்சி  தலைவர்களாக  உள்ள  சிலர்   ஆண்டுக்கு  ரிம7 மில்லியன்  பெறுவதை   அறிவீர்களா?”,  என்றவர்   வினவினார்.

தனியார்  துறை  சம்பளத்தைவிட   குறைவாக    இருப்பதால்   எம்பிகளின்   சம்பளம்   உயர்த்தப்படுமா   என்று   நிருபர்  ஒருவர்   வினவியதற்கு  மகாதிர்   இவ்வாறு   பதிலளித்தார்.