ஜோ லவ்வை கைது செய்ய மலேசியா விடுத்துள்ள கோரிக்கையை மக்காவ் போலிஸ் உறுதி செய்கிறது

 

மலேசிய வணிகர் லவ் டெக் ஜோவை கைது செய்யும்படி மலேசிய அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கையை மக்காவ் போலீஸ் இன்று உறுதி செய்ததோடு அது குறித்து அதன் அடுத்த நடவடிக்கையை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறிற்று.

இச்செய்தி இ-மெயில் வழி மலேசியாகினிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முன்னேரத்தில், மலேசிய போலீஸ் படைத் தலைவர் முகமட் பூஸி ஹருண் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஜோ லவ்வை கைது செய்யும்படி மக்காவ் போலீஸுக்கு முறையான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜோ லவ்வை தேடி வரும் மலேசிய போலீஸ், அவரைப் பிடிப்பதற்காக ஹோங் ஹாங் சென்றது. ஜோ அங்கிருந்து தப்பித்து மக்காவ் சென்று விட்டார்.

சீனாவின் சிறப்பு நிருவாக பகுதியான மக்காவ் ஒரு நாட்டிலிருந்து தப்பி ஓடிவந்தவரை அவருடைய சொந்த நாட்டிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் எதனையும் மற்ற நாடுகளுடன் செய்து கொண்டிருக்கவில்லை.