மனைவியின் மானத்தை காப்பாற்ற முடியாத ரஜினி.!

எப்போதும் தனது அதிரடி கருத்துக்களால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கக்கூடிய பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தற்போது தமிழக அரசியல் களத்தில் நிகழும் நடிகர்களின் அரசியல் வருகையை மிக காட்டமாகவே விமர்சித்துவருகிறார். எதிர்வினைகளை குறித்து அவர் கிஞ்சித்தும் அஞ்சுவதாக தெரியவில்லை.

இந்த நிலையில், மீண்டும் தனது அதிரடி கருத்தால் ரஜினியை விளாசியுள்ளார் சு. சாமி. சென்னையில் தனியார் பள்ளி நடத்திவரும் ரஜினியின் மனைவி தனது பள்ளி செயல்படும் கட்டிடத்திற்கான வாடகை தொகையினை முறையாக செலுத்தவில்லை என கூறி நீதிமன்றம் வரை சென்றார் கட்டிட உரிமையாளர்.

மேற்கண்ட விவகாரத்தினை சுட்டிக்காட்டி தனது மனைவியின் மானத்தினை காப்பாற்ற இயலாதவரா தமிழக மக்களை காப்பாற்றுவார் என காட்டமாக ரஜினியை விலாசியுள்ளார் சு.சாமி.

-athirvu.in