ஹரப்பான் எம்பிகள் மூன்று மாதங்களில் சொத்து விவரங்களை எம்ஏசிசி- இடம் அறிவிக்க வேண்டும்

பக்கத்தான்  ஹரப்பான்     சட்டப் பிரதிநிதிகள்  அனைவருக்கும்    அவர்களின்   சொத்து   விவரங்களை  எம்ஏசிசி-இடம்    அறிவிக்க   மூன்று  மாத   அவகசாம்   வழங்கப்பட்டிருப்பதாக    உள்நாட்டு   வணிக,  பயனீட்டாளர்   விவகார   அமைச்சர்   சைபுடின்   நசுத்தியோன்  இஸ்மாயில்  கூறினார்.

“சொத்து  விவரத்தை    அறிவிக்க  வேண்டும்   என்று   பிரதமரிடமிருந்து  உத்தரவு  வந்துள்ளது.

“ எம்ஏசிசி   ஒரு   பாரத்தைத்   தயாரித்துக்  கொடுக்கும். நாங்கள்  பூர்த்தி   செய்ய   வேண்டும்.  அதில்  உள்ள   விவரங்கள்   எல்லாம்  எம்ஏசிசி   வலைத்தளத்தில்  வெளியிடப்படும். பொதுமக்கள்  அதைப்   பார்க்கலாம்”,  என்றவர்   கூறியதாக   த   ஸ்டார்   தெரிவித்தது.