அந்தோனி லோக் டிஎபி நாடாளுமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

 

சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் டிஎபியின் நாடாளுமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இந்த அறிவிப்பை இன்று செய்தார். இதுவரையில் கிட் சியாங் இப்பதவியை வகித்து வந்துள்ளார்.

டிஎபியின் மத்தியச் செயற்குழு அந்தோனி லோக்கை இப்பதவிக்கு நியமித்ததாக கிட் சியாங் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறார்.

நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டம் அடுத்தத் திங்கள்கிழமை, ஜூலை 16 இல் கூடுகிறது.

1969 ஆம் ஆண்டில் பண்டார் மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிட் சியாங் இப்போதுதான் முதல்தடவையாக நாடாளுமன்ற பின்னிருக்கை உறுப்பினராக இடம் பெறுகிறார்.