முள்ளிவாய்க்கால் பேரவலம் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மலேசியாவில் இந்நிகழ்வை 17.05.2012 வியாழக்கிழமை அதாவது இன்று இரவு 7.30 மணிக்கு தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர், சோமா அரங்கில் செம்பருத்தி ஏற்பாடு செய்துள்ளது.

ஆக்கிரமிப்புக்கும் அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ் உறவுகள், தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தவும் போரில் மடிந்த உறவுகளை நினைவுகூரவும் நீதியை நிலைநாட்டவும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சிங்கள அரசு மே 18 ஆம் தேதி போரின் வெற்றி நாளாக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் நீதியினை வென்றெடுக்க முள்ளிவாய்க்கால் மூன்றாம் நினைவு நாளினை உலகம் முழுவதும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள தமிழ் ஈழ உணர்வாளர்கள் இதனை அழைப்பாக ஏற்று நினைவு நாள் நிகழ்வுக்கு வருமாறு அனைவரையும் செம்பருத்தி கேட்டுக்கொள்கிறது.

மேல் விவரங்களுக்கு : செம்பருத்தி –  03-26980622, இளந்தமிழ் – 012-3143910

TAGS: