யூரோ கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது டென்மார்க்!


யூரோ கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது டென்மார்க்!

நெதர்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து மற்றும் உக்ரைனில் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

கார்கிவ் (உக்ரைன்) நகரில் உள்ள மெட்டாலிஸ்ட் மைதானத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், ‘பிபா’ ரேங்கிங்கில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, 9வது இடத்தில் உள்ள டென்மார்க் அணியை எதிர்கொண்டது.

ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோல் அடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் மைக்கேல் குரோன் டெல்லி, ஒரு கோல் அடித்தார். இதற்கு நெதர்லாந்து வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த நெதர்லாந்து அணியினரின் கோல் அடிக்கும் முயற்சியை, டென்மார்க் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். ஆட்டநேர முடிவில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: