ஜாக்கிரதை…! DNS வைரஸ் வருகிறது; உங்கள் கணினிகளுக்கு ஆபத்து வருமா ?


ஜாக்கிரதை…! DNS வைரஸ் வருகிறது; உங்கள் கணினிகளுக்கு ஆபத்து வருமா ?

“ஏய்… வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய்” என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப் பார்த்தாலும்; அத்துடன் அதுகுறித்த தகவல்தான் அதிகமாக பரிமாறக் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கணினியில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9-ம்தேதி அதாவது இன்று அம்பேல்தான் என்கின்றனர் கணினி பொறியிலாளர்கள்.

DNS ( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது.

தற்போது DNS, சேஞ்சர் (அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் கணினி சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் இறங்கினர். இது கடந்தஆண்டு நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கணினிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு FBI மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட தற்போது முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9-ம் தேதி அதாவது இன்று செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல இலட்ச கணினிகள் செயல் இழக்கும் அபாயம் ஏற்படும் என எதிர்வு கூறப்படுகிறது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே, DNS சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும்.

பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே, தங்களின் கணினிகளில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் இந்த இணைப்பை www.dns-ok.us கிளிக் செய்யுங்கள்; உங்கள் கணினி பாதிக்கப்படாமல் இருந்தால் பச்சை நிறத்தில் தகவல் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை தகவல் வரும்.

வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டி வைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்த இணைப்பில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது. ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: