ஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்!


ஆய்வு: அறிவு வளர்ச்சியில் ஆண்களை முந்திய பெண்கள்!

லண்டன்: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்கள், நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து நன்மைகளையும் கிரகித்துக் கொண்டு அறிவு வளர்ச்சியில் ஆண்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றுவிட்டனர்.

இதுவரை அறிவு வளர்ச்சி விழுக்காட்டில் 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பது பெண்களின் இந்த வளர்ச்சிக்கு உதாரணமாகக் கூறலாம் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

ஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: